முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட வாக்கெடுப்பு நடத்த கூடாது: வளர்ப்பு நாய்களுடன் பேரணி சென்ற இங்கிலாந்து மக்கள்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது வாக்கெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தி ஒருமுறை இதனை உறுதி செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனை நடத்தக் கூடாது என்று ஒரு சிலர் முடிவு எடுத்தனர். அவ்வாறு முடிவு எடுத்தவர்கள் எல்லாருமே நாய் வைத்திருக்க கூடியவர்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல பிராணிகளுக்கு பாஸ்போர்ட் தருவது கிடையாது. எனவே மற்றொரு வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தங்கள் வீட்டு நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் போராட முடிவு செய்தனர்.

அதற்காக, தாங்கள் வளர்க்கும் பலவகையான நாய்களை அழைத்து வந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான நாய்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக போயின. கூடவே அந்த நாய்களின் சொந்தக்காரர்களும் சென்றனர். ஒவ்வொரு நாயும் தனக்கு பக்கத்தில் ஒரு கோரிக்கை பலகையை வைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டது. இந்த நாய்களின் பேரணியை தற்போது உலக நாடுகளே திரும்பி பார்த்துள்ளன. நாய்களின் அழகில் சொக்கி விழுந்த பலர், இந்த போராட்டத்துக்கு ஆதரவினையும் அதிகமாகவே தர ஆரம்பித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து