முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுக டெஸ்டில் ஏற்பட்ட சோதனை: காயத்தால் ஷர்துல் தாகூர் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.

முகமது ஷமிக்கு ஓய்வு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ஷர்துல் தாகூர் அணியில் அறிமுகமானார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அறிமுகம் ஆன ஷர்துல் தாகூர் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார்.

கணுக்கால் காயம்....

சிறப்பாக பந்து வீசி இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு யுனிட்டில் இடம்பிடிக்க வேண்டும் போன்ற ஆயிரம் கனவுகளோடு களம் இறங்கினார். உமேஷ் யாதவ் உடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீசினார். முதல் ஒவரில் 1 ரன் விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரின் 4-வது பந்தை வீசும்போது காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பிறகு அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த பிறகே மீதமுள்ள நான்கு நாட்கள் விளையாடுவாரா? என்பது தெரியவரும். அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் சோகத்துடன் வெளியேறியுள்ளார் சர்துல் தாகூர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து