முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தானத்தின் புதிய படம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான 'மாஸ்ட்ரம்' , 'த பர்ஃபெக்ட் கேர்ள்' , 'லவ் கேம்ஸ்' என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்திப் படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4 ல் வெற்றி பெற்றவர் என்பதும், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1 ’ என்ற பெயரில் இந்தப் படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் வெளிவரவிருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து புதிய படம் உருவாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து