முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கட்டட கட்டுமானப்பணியினை துணை முதல்வர் .ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

 தேனி - தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்  , மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்,   முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பெருந்திட்ட வளாகத்தில்   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை வளாக புதிய கட்டடத்திற்கான கட்டுமானப்பணியினை தொடங்கி வைத்தார்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. போதிய இட வசதியின்மையின் காரணமாகவும், புதிய திட்டங்களை செயல்படுத்திடும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகளுக்கென தனி கட்டடம் வேண்டி தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து வரைவு அனுப்பட்டது.
அதனடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களுக்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பெருந்திட்ட வளாகத்தில் (மாவட்ட வேலைவாய்ப்பு அவலகத்திற்கு பின்புறம்) ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் முதல் தளம் 15,600 சதுர அடியிலும், இரண்டாம் தளம் 13,300 சதுர அடி என மொத்தம் 28900 சதுர அடி பரப்பளவில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
இக்கட்டடத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம் ஆகிய அலுவலகத்திற்கான அலுவலர்கள் அறை, உதவித்திட்ட அலுவலர்கள் அறை,  செயற்பொறியாளர் அறை, கணினி அறைகள், கண்காணிப்பாளர் அறைகள், பதிவேடுகள் பராமரிக்கும் அறைகள், கூட்டரங்கம், ஆண், பெண் கழிப்பறை, காத்திருப்போர் அறை, உணவு அருந்துமிடம், எழுது பொருட்கள் வைப்பதற்கான அறை போன்ற வசதிகளுடன் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இந்;த நிகழ்வின்;போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார்,  ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, செயற்பொறியாளர் எம்.கவிதா, மகளிர் திட்ட அலுவலர் எம்.கல்யாணசுந்தரம், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்ரிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.அபிதாஹனீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயலட்சுமி, முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து