சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      ஆன்மிகம்
Unnikrishnan Namboodiri 05-11-2018

திருவனந்தபுரம்,சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம் என்று மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பக்தர்கள் எதிர்ப்பு....சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், பல்வேறு இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்த போது போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்ற 2 இளம்பெண்கள் பக்தர்களின்எதிர்ப்பால் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் தடியடி சம்பவங்களும் நடந்தது. இதனால் சபரிமலையில் பதட்டமான சூழல் உருவானது.அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர். 

சாவியை ஒப்படைப்போம்....இந்த நிலையில் நேற்று  மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் பெண் பக்தர்களைசன்னிதானத்தில் அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸ் ஐ.ஜி. அஜித்குமாரை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து