முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா தொடர்ந்து நட்பு நாடாக நீடிக்கும்: ஆப்கன் அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து விளங்கும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் முகமது ஹூமாயூன் கயோமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மக்களின் கேள்விக்கு கயோமி பதிலளித்ததாவது:-

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான நட்புறவு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தது. பாரம்பரியமாக இரு நாடுகளும் நட்பு பாராட்டி வருகின்றன. கலாசாரம், வர்த்தகம் போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் செயல்பாடுகளும் ஒத்துப்போகின்றன. இனிவரும் காலங்களிலும், இந்தியா தொடர்ந்து நட்பு நாடாகவே விளங்கும்.

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்தவித மறைமுக ஒப்பந்தங்களும் இல்லை. நம்பிக்கை, இரு நாட்டு மக்களிடையேயான பாரம்பரியத் தொடர்பு ஆகியவற்றின் மூலமே இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு நீடித்து வருகிறது. அந்த நல்லுறவை இரு நாடுகள் மட்டுமே தீர்மானித்து வருகின்றன. எந்தவித வெளிக்காரணிகளும் இரு நாட்டு உறவுகள் குறித்து தீர்மானிக்கவில்லை. இரு நாடுகளுக்குமிடையே கலாசாரம், கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் நிலவி வரும் நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும்.

பாகிஸ்தானுடனும் ஆப்கானிஸ்தான் நல்லுறவையே வைத்துக்கொள்ள விரும்புகிறது. இது குறித்து, அந்த நாடு தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். உலகின் ஆறாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கி வரும் போதிலும், அதன் பொருளாதாரம் இஸ்ரேலை விடக் குறைவான அளவிலேயே உள்ளது.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் அரசானது இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் நட்பு பாராட்ட வேண்டும். தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், அதிலுள்ள நாடுகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவையனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து