முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் ஆஸி. வீரர்களுக்கு டுபிளெஸிஸ் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்திய கேப்டன் விராட் கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் என ஆஸி. வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி 20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸி. சென்றுள்ளது. முந்தைய தொடர்களில் கேப்டன் கோலி மற்றும் ஆஸி. வீரர்கள் இடையே ஆக்ரோஷமான போக்கால் மோதல் ஏற்படுவது வழக்கம். தற்போதைய தொடரில் எதிரணி வீரர்களை வெறுப்பேற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. கேப்டன் கோலியையும் நிதானமாக செயல்படும்படி கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் கூறியதாவது:

எங்கள் நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்த போது, நாங்கள் கோலியை அமைதியாக வைத்திருக்க நாங்களும் அமைதியாக இருந்தோம். சர்வதேச ஆட்டங்களில் மோதலில் ஈடுபட விரும்பும் வீரர்களிடம் இதை தவிர்க்க வேண்டும். அப்போது நாங்கள் 2-1 என தொடரை வென்றோம். 3 ஆட்டங்களில் 286 ரன்களை எடுத்து கோலி சாதனை புரிந்தார். கோலியை பற்றி நாங்கள் எதுவுமே கூறக்கூடாது என முடிவு செய்தோம். கோலி இங்கிலாந்து, மே.இ.தீவுகளுடன் நடைபெற்ற தொடர்களில் அபாரமாக ஆடியுள்ளார். மிகச்சிறந்த வீரரரான கோலியை நாங்கள் அமைதியாக நடத்தினோம். அப்போதும் அவர் ரன்களை குவித்தார். எனவே ஆஸி. வீரர்கள் கோலியிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து