டிராவில் முடிந்தது சி.ஏ. லெவன் -இந்தியா பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் சதம்

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      விளையாட்டு
murali vijay century 2018 12 02

சிட்னி : கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ) லெவன் - இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

அடிலெய்டில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட்டுக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சிட்னியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சிஏ லெவன் அணி 544 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆர்சி ஷார்ட் 74, மேக்ஸ் பிரையன்ட் 62, ஹாரி நீல்ஸன் 100, ஆரோன் ஹார்டி 86, டேனியல்பாலின்ஸ் 43 ரன்களை குவித்தனர்.
இந்திய தரப்பில் முகமது சமி 3-97, அஸ்வின் 2-122 விக்கெட்டை வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இந்தியா 43.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 98 பந்துகளில் 62 ரன்களை சேர்த்து வெளியேறினார். தமிழக வீரர் முரளி விஜய் 5 சிக்ஸர், 16 பவுண்டரியுடன் 132 பந்துகளில் 129 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சரிவர ஆடாததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் வழக்கமான பந்துவீச்சாளர்களோடு கேப்டன் கோலி, ஹனுமா விஹாரி, முரளி விஜய், ஆகியோரும் பந்துவீசினர். இறுதியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

நியூஸி ஏ-இந்தியா ஏ மோதல்: வான்கரேயில் நடைபெற்று வரும் நியூஸிலாந்து ஏ மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அதிகாரபூர்வ டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 323/9 ரன்களை எடுத்தது (வி.சங்கர் 71, சுப்மன் கில் 62), பிரேஸ்வெல் 5/78, பெர்குஸன் 4/88). நியூஸி. ஏ முதல் இன்னிங்ஸ்-52 ஓவர்களில் 121/3. (செய்ஃபெர்ட் 55, ).

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து