புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 3-வது முறை கால அவகாசம் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      தமிழகம்
kaja storm rescue work 2018 11 16

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 26-ம் தேதி வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 31-ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வரும் 31-ம் தேதி...

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் வரும் 26-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் வரும் 31-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம். நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் வரும் 26-ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் 26-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

3-வது முறை அவகாசம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3- வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது. தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து