அமெரிக்காவின் வாடகை துப்பாக்கி போல பாகிஸ்தான் இனி செயல்படாது: இம்ரான்கான் பேட்டி

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      உலகம்
Imran Khan 2018 12 07

இஸ்லாமாபாத், அமெரிக்காவின் வாடகை துப்பாக்கி போல பாகிஸ்தான் செயல்படாது என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிகைக்கு இம்ரான்கான் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அமெரிக்கா தனது செயற்கைக் கோள்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக எல்லைப் பகுதியை கண்காணித்துக் கொண்டுதான் உள்ளது. அப்படி இருக்கும் போது தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தானுக்குள் வர முடியும். பாகிஸ்தானை வாடகைக்கு எடுத்துள்ள துப்பாக்கியை போல பயன்படுத்தும் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை. நாங்கள் நல்ல உறவை மட்டுமே அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

சீனாவுடன் எங்களுக்கு உள்ள உறவு வணிக உறவு. இதுபோன்ற உறவை தான் அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாத எதிர்ப்பு போரின் போது பலியாகியுள்ளனர். ஆனால் பாகிஸ்தானை நம்பாமல் அமெரிக்கா தன்னிச்சையாக பின்லேடன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்துதான் அமெரிக்கா இதை செய்திருக்க வேண்டும். நாங்கள் அவர்களின் நான் நட்பு நாடா, அல்லது பகைமை நாடா என்பது புரியவில்லை. இவ்வாறு இம்ரான்கான் தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து