முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸி. ஸ்லிப் பீல்டர் ஹேண்ட்ஸ் கம்ப் தரையில் பட்டு கேட்ச் எடுத்து விட்டு முறையாகப் பிடித்ததாக நடுவரைத் திசைத் திருப்ப அவர் அவுட் கொடுத்தார். இதனால் ரீப்ளேயில் சரிவரத் தெரியவில்லை என்று டிவி நடுவர்கள் நடுவர் அவுட் தீர்ப்புக்கு விட்டு விட்டார். விராட் கோலி அவுட் ஆனதால் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கிய நிலையில் 283 ரன்களுக்குச் சுருண்டது. இந்நிலையில் பிஷன் சிங் பேடி முன்னாள் வீரர் உட்பட நெட்டிசன்கள் காய்த்து எடுத்து விட்டனர்.

இந்த டிவி ரீப்ளேயை புகைப்படம் எடுத்து ஆஸி.ஊடகம் ஒன்று கோலி ஹேஸ் டு கோ என்று டுவீட் செய்ய நெட்டிசன்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர். பலரும் நடுவர் தரம் கீழ்த்தரமாகச் சென்று விட்டது என்றும் மேலும் சிலர் 2008 தொடர் போல் மோசடி செய்ய நினைக்கிறார்கள் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு பிராடு தவிர வேறு தெரியாது என்று சிலரும், வேறு சிலர் கோலியை இப்படி வீழ்த்தினால்தான் உண்டு என்றும் பல்வேறு விதமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து