முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெர்த் டெஸ்டில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல்: விளையாடியது ஆச்சரியம்: கும்ப்ளே

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை, பெர்த் டெஸ்டில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது ஆச்சரியம் அளித்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டி கொண்ட தொடரில் அடிலெய்வில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது.

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் காயம் காரணமாக இந்தியாவின் முதன்மை வீரர் அஸ்வின் விளையாடவில்லை. பெர்த் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் இந்திய அணி 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கவில்லை. இதனால் பெர்த் டெஸ்டில் இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும் என்று கருத்து எழுந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றே கருதுகிறேன். எல்லா சூழ்நிலையிலும் தாக்குதல் பந்தவீச்சு தேவைப்படும். ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தால் 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அப்படி இல்லையென்றால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை. இந்திய அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறது. தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துக்கு திணறுகிறது.

இதனால் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும். ஆனால் பெர்த் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது ஆச்சரியம் அளித்தது. குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இளம் வீரர். ஏற்கனவே அவரது பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி உள்ளனர். எனவே குல்தீப் யாதவை பரிசீலித்து இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து