முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிக்கான விருது விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்,-  விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர்; அலுவலகத்தில், தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக பள்ளிகளில் கழிவறை பயன்படுத்துதல், தூய்மையான குடிநீர், கை கழுவுதல், பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு, நடத்தை மாற்றம் மற்றும் திறன்மேம்பாடு பிரிவுகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  வழங்கி பாராட்டினார்கள்.
  தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக நமது மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் கழிவறை பயன்படுத்துதல், தூய்மையான குடிநீர், கை கழுவுதல், பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு, நடத்தை மாற்றம் மற்றும் திறன்மேம்பாடு பிரிவுகளின் அடிப்படையில் தங்கள் பள்ளிகளில் உள்ள வசதிகளை ஆன் லைன் மூலம் இணையத்தில் பதிவேற்ற கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 5 நட்சத்திர மதிப்பீடுதல் மூலம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய குழு நேரில் பார்வையிட்டு அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படும் 8 பள்ளிகளும், ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படும் 8 பள்ளிகள் வீதம் 40 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கு அனுப்பப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட 8 பள்ளிகளை வெளிமாவட்ட அலுவலர்கள் பார்வையிட்டு அப்பள்ளி பற்றி விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அதிலிருந்து மாநில அளவிற்கும் பின் தேசிய அளவிற்கும் பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
 அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பள்ளிகளில் கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் இண்டர்நேசனல் பள்ளி,  மாநில அளவில் தேர்வு பெற்று ரூ.50,000ஃ- பரிசு பெற்றது. மாவட்ட அளவில் அனைத்து பிரிவுகளிலும் 7 பள்ளிகளுக்கும், துணைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும் அனைத்து பிரிவுகளில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட 7 பள்ளிகளுக்கு ரூ.10,000 - ம், துணைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளுக்கு ரூ.5000 -ம் பரிசுத் தொகையாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் வழங்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர்  இரா.சுவாமிநாதன்   தெரிவித்துள்ளார்
 இந்நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம்) திரு.நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து