முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி: தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பிரச்சினைக்குக் காரணமானது - கேப்டன் விராட் கோலி பேட்டி

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      விளையாட்டு
virat kohli 2019 01 12

சிட்னி : ரோஹித் சர்மா-டோனி கூட்டணி 28 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை அளித்தாலும் வேகத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம் என்று விராட் கோலி தெரிவித்தார்.

உறுதுணையளித்தார்...

ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

நாங்கள் ஆடிய விதம் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பந்து வீச்சில் நன்றாகச் செயல்பட்டோம். பிட்ச் 300+ பிட்ச் ஆகும், இதில் 288 ரன்கள் எடுத்து வெற்றிபெறக்கூடிய இலக்குதான். 3 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தது நல்லதல்ல. ரோஹித் சர்மா தனித்துவமான முறையில் ஆடினார், டோனி அவருக்கு உறுதுணையளித்தார். ஆனால் கொஞ்சம் நாம் ஆட்டத்தின் வேகத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். அங்குதான் வீழ்ந்துவிட்டோம்.

அதிகப்படுத்தியது...

ரோஹித்தும், டோனியும் ஆட்டத்தை நீட்டித்து நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர், ஆனால் அப்போது எம்.எஸ். (டோனி) ஆட்டமிழந்தார். இது ரோஹித் சர்மா மீது அழுத்தத்தை அதிகப்படுத்தியது. இன்னொரு கூட்டணி அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ஆட்டம் சென்றிருக்கும்.  ஆனால் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பிரச்சினைக்குக் காரணமானது. மீண்டும் எழும்பாதவாறு தொழில்பூர்வமாக ஆஸ்திரேலியா ஆடினர்.

கவலைப்படுவதில்லை...

இன்றைய (நேற்று) தினத்தில் ஆஸ்திரேலியா எங்களை விட நன்றாக ஆடியது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிவுகள் பற்றி பெரிய அளவில் நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்த மாதிரி தினங்கள் ஒரு அணியாக இன்னும் செயலாற்ற வேண்டிய விஷயங்களை நமக்கு அறிவுறுத்துகிறது. இவ்வாறு கூறினார் விராட் கோலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து