முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சீனியர் ஹாக்கி: தமிழகம் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : தேசிய சீனியர் ஆக்கி பி பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக அணி, மத்திய தலைமை செயலகம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - மத்திய தலைமை செயலக அணிகள் மோதின. இந்த போட்டியில் மத்திய தலைமை செயலகம் அணியை 4 -3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழகம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழகம், மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து