முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய புகார்: காங்கிரசுக்கு பா.ஜ.க கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று கூறி நமது தேர்தல் நடைமுறையை அவமதிக்க முயல்வதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹேக் செய்ய முடிந்தது...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியரும், தொழில்நுட்ப நிபுணருமான சையது சுஜா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து டெல்லி மாநில தேர்தல் தவிர பெருவாரியான தேர்தல்களில் ஹேக் செய்ய முடிந்தது என்றும் லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

ஆலோசனை

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், எங்களிடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வோம் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ.க. கேள்வி ?

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்படியிருக்கையில் எங்களை குற்றம் சாட்டுவது எப்படி? என பா.ஜ.க. கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக டெல்லி காவல் நிலையத்தில் இந்திய தேர்தல் ஆணையமும் புகார் அளித்துள்ளது.

முட்டாள்தனம்...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி உள்நாட்டில் பலிக்கவில்லை. இதனால், வெளிநாட்டிலிருந்து நமது தேர்தல் நடைமுறையை அவமதிக்க முயலுகின்றனர் என்று முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மோசமான குற்றச்சாட்டுக்கள் மூலம் எதிர்க்கட்சிகள் 2014-ல் மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிப்பு செய்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானவை என்றும் அவர் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து