முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகச் சிறந்த பிரதமர் யார் ? மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இதுகுறித்து ஊடக நிறுவனமான டைம்ஸ் குழுமம் ஆன்லைன் வாக்குப்பதிவை நடத்தியுள்ளது. கடந்த 11-ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்து கணிப்பில் 2 லட்சம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

ராகுலுக்கு 8.33 சதவீதம் பேர்

அதன்படி,மிகச் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு. பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 8.33 சதவீதம் பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற தலைவர்கள் சிறந்த பிரதமராக செயல்பட முடியும் என 5.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடி அரசு அமையும்

2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக 31 சதவீதம் பேரும், அதிகரிக்கவில்லை என 63 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இதுபோலவே, மோடி தலைமையிலான அரசு அமையும் என 83 சதவீதம் பேரும், ராகுல் காந்தி தலைமையிலான அரசு அமையும் என 9.25 சதவீதம் பேரும், மோடி அல்லாத பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் என 4.25 சதவீதம் பேரும், மாநில கட்சிகளின் கூட்டணி அரசு அமையும் என 3.47 சதவீதம் பேரும் கருத்து பதிவு செய்துள்ளனர். மோடி அரசு மிகச்சிறப்பாக செயல்படுவதாக 59.51 சதவீதம் பேரும், மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக 22.29 சதவீதம் பேரும், மோடி அரசு மோசம் என 9.94 சதவீதம் பேரும், மோடி அரசின் செயல்பாடு சராசரி என 8.25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து