முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுஷ்மா பங்கேற்பு - பாக் வெளியுறவு அமைச்சர் புறக்கணிப்பு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

அபுதாபி, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறந்து விருந்தினராக இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மாநாட்டை புறக்கணித்தார்.

அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்காமல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி புறக்கணித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதை தவிர்க்கவும், தர்மசங்கடமான சூழல் ஏற்படாமல் இருக்கவுமே பாகிஸ்தான் தரப்பில் இருந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து