விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங் ஆன டோனி !

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      விளையாட்டு
donii 2018 05 04

Source: provided

புதுடெல்லி : மொஹாயில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் டோனி விளையாடவில்லை. ஆனால், ட்விட்டரில் அவரது பெயர் டிரெண்டிங் ஆன நிகழ்வு நடந்துள்ளது.

தவான் 143 ரன்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார். இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

3-வது இடத்தில்...

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தப் போட்டியில் டோனி விளையாடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாகவே, டோனியின் பெயரை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். இந்திய அளவில் 3-வது இடத்தில் டோனியின் பெயர் டிரெண்டிங்கில் இருந்தது. போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரின் பெயர் டிரெண்டிங்கில் வருவது வழக்கம். ஆனால், விளையாடாத டோனியின் பெயர் டிரெண்டிங்கில் வந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து