பணப்புழக்கத்தைக் கண்காணிக்க 3 பேர் கொண்ட குழு தமிழகம் வருகை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
Sunil Arora 27-11-2018

புது டில்லி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது பற்றி ஆலோசிக்க இன்று டெல்லி ஓட்டல் அசோக்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

2014, 2016, 2018 தேர்தல்களில் பணியாற்றிய தேர்தல் பார்வையாளர்கள் ஏற்கனவே அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்ற இரண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளை கண்காணிக்க உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வர்.

தேர்தலில் கறுப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, பல்வேறு துறையினர் அடங்கிய புலனாய்வு குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க 2 ஓய்வு பெற்ற வங்கி தலைவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பிரசார நேரங்களில் வங்கிகளில் மொத்தமாக டெபாசிட் செய்யப்படும் பணம் பற்றி கண்காணிக்கப்படும். இதனால் 2 ஆயிரம் நோட்டின் விநியோகம் கட்டுப்படுத்தப்படும். கார்களில் பணம் கடத்தப்படுவதை கண்டுபிடிக்க, தேர்தல் பிரசாரம் முடிந்த பின் முக்கிய மாவட்ட எல்லைகளில் வந்து செல்லும் கார்கள் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.  பணப்புழக்கத்தைக் கண்காணிக்க நேரடி வரி வாரியம் மற்றும் சுங்கம், கலால் வரி வாரியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 பேர் அடங்கிய சிறப்பு குழு தமிழகம் வர ஒப்புதல் அளித்துள்ளது. இவர்கள் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கு சென்று ஆலோசனை நடத்துவர்.

இந்த சிறப்பு குழுவில் நேரடி வரி வாரிய தலைவர் பி.சி.மோடி. மறைமுக வரி வாரிய தலைவர் பிரணாப் குமார் தாஸ், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா, வருவாய் புலனாய்வு இயக்குனர் தேவி பிரசாத் தாஸ், மத்திய பொருளாதார புலனாய்பு அமைப்பின் இயக்குநர் மிதாலி மதுஷ்மிதா, நிதிப்பிரிவு புலனாய்வு துறை தலைவர் பஞ்கஜ் குமார் மிஸ்ரா ஆகியோர் இடம் பெறுவர். இதன் பிறகு, மேலும் புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து