முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுபவ வீரரான டோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது: மைக்கேல் கிளார்க்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : அனுபவ வீரரான எம்எஸ் டோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

டோனிக்கு ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்தியா, கடைசி 3 போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்தத் தொடரில் கடைசி 2 போட்டிகளில் விக்கெட் கீப்பர் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் பணியை ரி‌ஷப் பந்த் பார்த்தார். ஆனால் அவர் சில தவறுகளை செய்தார்.

விமர்சனம்...

வருகிற மே மாதம் 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்துள்ளது. இதனால் விமர்சனத்துக்குள்ளானது. கடைசி இரண்டு போட்டியிலும் டோனி விளையாடி இருந்தால் தோல்வி ஏற்பட்டு இருக்காது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மிடில் ஆர்டர் வரிசையில் டோனி தேவை என்று தெரிவித்து உள்ளார்.

மிகவும் முக்கியம்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் ‘‘டோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனென்றால் மிடில் ஆர்டர் வரிசையில் அனுபவம் மிகவும் முக்கியம்’’ என பதிவிட்டுள்ளார். கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியின்போது, ‘‘உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாடும் இந்திய லெவன் அணியில் யார் இடம் பிடிப்பார்கள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. சீதோஷ்ண நிலையை பொறுத்து ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து