முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை: போக்குவரத்து பாதிப்பு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

புஜேரா : ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

அமீரகத்தில் முதல்முறையாக ஒரு கோல்ப் பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்து போன சிலர் ஒதுங்க இடம் தேடி ஓடி சென்றனர். இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து