முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நேற்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார். அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு சபை கூடியது. அப்போது குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து