முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டனாக 4,000 ரன்களை கடந்தார்: ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் டோனி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

162 ரன் இலக்கு...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தனி ஒருவராக...

இதையடுத்து, டோனி தனி ஒருவராக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். மேலும், அவர் ஐ.பி.எல். போட்டிகளில் கேப்டனாக அவர் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து