ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 13 மே 2019      தமிழகம்
chandrasekhara-rao2018-08-23

Source: provided

ஸ்ரீரங்கம் : தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   

தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ்  தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.
இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர், நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பட்டாச்சாரியார்கள் சந்திரசேகர ராவ்க்கு பிரசாதம் வழங்கினர்.

இதையடுத்து அவர் பேட்டரி கார் மூலம், கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் சென்றனர். 

சுவாமி தரிசனம் முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். 

சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோவில், அவர் தங்கியிருந்த சங்கம் ஓட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து