முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றி அமைக்கப்பட்ட அனைத்து அமைச்சரவை குழுக்களிலும் இடம்பெற்ற அமித்ஷா

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 8 மத்திய அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து குழுக்களிலும் அமித்ஷா இடம் பெற்று உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசில் 8 அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதன்படி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவை குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அமைச்சரவைக் குழுவின் தலைவராக அமித்ஷா இருப்பார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சித்தராமன் மற்றும் ரெயில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

பொருளாதார விவகாரங்களுக்கான முக்கிய அமைச்சரவைக் குழுவில் (சி.சி.ஏ.ஏ.) பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, கட்காரி, கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.டி. சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உணவு பதப்படுத்துதல் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் அதன் உறுப்பினர்கள் ஆவர். சி.சி.ஏ.ஏ.வில் உள்ள மற்றவர்கள் எஸ் ஜெய்சங்கர், கோயல் மற்றும் பெட்ரோலியம் மந்திரி தர்மமேந்திர பிரதான் ஆகியோர் அடங்குவர்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் அமித்ஷாவின் தலைமையில் நிர்மலா சீதாராமன், நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், சமூக நீதி அமைச்சர் தாவார் சந்த் ஜெஹோட், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மாநில அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மெக்வால் மற்றும் வி முரளிதரன் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பர்.

அமித்ஷா, கட்காரி, நிர்மலா சீதாராமன், கோயல், பஸ்வான், நரேந்திர சிங் தோமர், நரேந்திர சிங் பிரசாத், ஹர்சிம்மர் கவுர், சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், கனரக தொழில் அமைச்சர் அரவிந்த் சாவந்த் மற்றும் ஜோஷி ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழுவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இருப்பார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து 8 முக்கிய அமைச்சரவை குழுக்களிலும் இடம் பெற்று உள்ளார். பிரதமர் மோடி ஆறு குழுக்களிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு குழுக்களிலும் உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழு குழுக்களிலும், வர்த்தக மற்றும் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஐந்து குழுக்களிலும் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து