பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      இந்தியா
JP Natta 2019 06 17

புதுடெல்லி : டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. மேலிட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்றிரவு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து