ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது

புதன்கிழமை, 26 ஜூன் 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நாளை (28-ம் தேதி) சென்னையில் நடைபெறுகிறது.

தவறாமல் கலந்து...

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறி்ப்பு வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் 28-ம் தேதி காலை11.30 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சட்டசபை தொடர்...

இந்நிலையில் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை (28-ம் தேதி) கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அ.தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து