முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறான பாதையை காட்டிய கூகுள் மேப்: ஒரே இடத்தில் சிக்கிய 100 கார்கள்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல வெவ்வேறு இடத்தில் இருந்து கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர். அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர். இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர்தான் அது தவறான பாதை என்பது தெரியவந்தது.

இது குறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் கூறுகையில், கணவரை அழைக்க விமான நிலையம் வருவதற்காக கூகுள் மேப்பில் குறைந்த நேரத்தில் செல்லக் கூடிய பாதையை தேடினேன். இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகதான் தெரிந்தது. தவறான பாதை என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், கூகுள் மேப்பில் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது என கூறியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து