விருத்தாச்சலம் தொகுதியில் கால்பந்து அகாடமி அமைக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
minister sengottaiyan 2019 05 09

விருத்தாச்சலம் தொகுதியில் விரைவில் கால்பந்து அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் பேசுகையில்,

விருத்தாச்சலத்தில் கால்பந்து அகாடமி அமைக்க அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கால்பந்து விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உள்ளனர். என்னுடைய தொகுதிகளிலும் அதிக அளவு கால்பந்து வீரர்கள் உள்ளனர். ஆகவே கால்பந்து அகாடமி அமைத்து தர அரசு முன்வர வேண்டும். மேலும் எனது தொகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் அமர்வதற்கு கட்டிடம் இல்லாமல் உள்ளது. ஆகவே இந்த பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தில் கூடுதல் கட்டிடம் கட்டி தர முன் வர வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன்:

உறுப்பினர் குறிப்பிட்டுள்ள தொகுதியில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அதிகளவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று என்.எல்.சி. நிறுவனத்துடன் பேசியுள்ளேன். ஆகவே விரைவில் அந்த பகுதியில் கால்பந்து அகாடமி அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை, ஆய்வகங்கள், கழிப்பறைகள், சுற்றுசுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு இந்தாண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டிடம் கட்டி தரப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து