முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் சிறிய விமானம் விழுந்த விபத்தில் 4 பேர் பலி

புதன்கிழமை, 24 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகோ நாட்டில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலம். இங்கு நேற்று முன்தினம் 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென கீழே வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் பெண் உள்பட 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து