முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசர்பைஜான் அருகே ஈரான் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது - 2 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பகு : அசர்பைஜான் அருகே கடலில் மூழ்கிய ஈரான் சரக்கு கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உள்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் அன்சாலி துறை முகத்தில் இருந்து ரஷ்யாவில் உள்ள மக்காச்சாலா என்ற இடத்துக்கு டைல்ஸ்களை ஏற்றிக் கொண்டு பாகாங் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அது ஈரானில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 2 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 7 பேரும் ஈரானை சேர்ந்தவர்கள். இக்கப்பல் அசர்பைசான் நாட்டின் பகு அருகேயுள்ள லஸ்காரன் துறைமுகம் அருகே சென்ற போது கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது அபர்பைஜான் நாட்டின் கடற்படை ரோந்து கப்பல் அந்த வழியாக சென்றது. அதை பார்த்ததும் மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் உதவி செய்யுமாறு கூச்சலிட்டனர். உடனே 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அங்கு விரைந்தன. அவர்கள் தீவிர முயற்சி எடுத்து 2 இந்தியர்கள் உள்பட கப்பலில் இருந்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கி விட்டது. நீர் கசிவு காரணமாக கப்பலுக்குள் கடல் தண்ணீர் புகுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து