முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மதுரை கோவை மாவட்டங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, கோவை மதுரை ஆகிய இடங்களில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசு போன்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இயக்குநர் குழு கூட்டம் 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை), அரசு விரைவு போக்குவரத்துன் கழகம் (சென்னை), உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ், சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு, பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து முடித்தல், பணிமனைகளை பழுது நிவர்த்தி செய்தல், பழைய பேருந்துகள் மற்றும் அலுவலக வாகனங்களை கழிவு செய்தல், அண்மையில் சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில், போக்குவரத்துத்தறை அமைச்சர் விஜயபாஸ்கரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துதல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் வசூல் நிலவரம், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.

இறுதியாக, தலைமை வகித்த போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் தமது உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் மேம்படுத்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில், கடந்த ஆண்டுகளில் 1,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,881 புதிய பேருந்துகள், போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ன.

இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட தற்போதைய கால கட்டத்திற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. அவற்றை நல்லமுறையில் பரமாரித்து வருவாயினைப் பெருக்கிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த துணை மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டின் ஏறத்தாழ 1,912 கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகங்கள் மேம்பாடு மற்றும் பணியாளர்களின் ஓய்வுகால பலன்கள் வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பணியாளர்களின் நலனை மேம்படுத்திட, உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில், ஆய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 9 விருதுகளை பெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும் மற்றும் அலுவலர்களையும் நான் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோகமாக 10 பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடிவமைக்கப்படும் புதிய பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலியுடனே பேருந்தில் ஏறி பயணம் செய்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டு கூடிய விரைவில் இயக்கப்பட உள்ளது. நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பின்ற வகையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக சி-40 கீளின் பஸ் பிரகடனம் என்கிற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் பலக் கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

மேலும், பொது மக்களின் சேவைகளில் ஈடுபட்டுள்ள நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் களைந்திட ஆவன செய்யுமாறு மேலாண் இயக்குநர்களை கேட்டு கொண்டார். அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் பணியாளர்களின் குறை கேட்கின்ற நாளாக தேர்வு செய்து அந்த நாட்களில் தலைமையிடம் மற்றும் பணிமனைகளில் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை உடனுக்குடன் சரி செய்திடுமாறும் கேட்டுக் கொண்டார். தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் முழு அர்ப்பணிப்புடன் தரமான சேவையை பொது மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து