ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      உலகம்
youth women arrest 2019 08 20

பெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஐஸ்கிரீம் வாங்கி உண்ண வேண்டும் என காதலி கேட்டார். ஆனால் காதலரோ, நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா? என்று கூறி வாங்கித் தர மறுத்து விட்டார். ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் எடை குறித்து கேலி செய்ததால் காதலி ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து சென்றார். பின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு அங்குள்ள கடைக்குச் சென்று 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்தார். காதலர்  எதற்காக கத்தரிக்கோல்? என கேட்ட அடுத்த நொடியே அவரது வயிற்றில் 4 முறை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற காதலியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து