ஆஷஸ் தொடர்: 5-வது டெஸ்டில் ஜேசன் ராய், பட்லருக்கு வாய்ப்பு- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      விளையாட்டு
Jason Roy-Butler 2019 09 09

ஓவல் : ஆஷஸ் தொடரில் ஜேசன் ராய், பட்லர் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 5-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜேசன் ராய்க்கு டெஸ்ட் போட்டியில் இடம் கிடைத்தது. ஆனால் நான்கு டெஸ்டிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நான்கு டெஸ்டிலும் சேர்த்து அவரது சராசரி 13 மட்டுமே.

இதனால் 12-ந்தேதி ஓவலில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து நீ்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ஜேசன் ராய்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓவலில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இந்தத் தொடரோடு முடிவுக்கு வந்துவிடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரும் சிறப்பாக விளையாடவில்லை. அவரது சராசரி 16 ஆகும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து