முத்தரப்பு டி 20: வங்கதேச அணியில் இருந்து மெஹிதி ஹசன் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      விளையாட்டு
Mehdi Hasan 2019 09 10

டாக்கா  : வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடருக்கான அணியில் இருந்து மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 13 பேர் கொண்ட வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் நீக்கப்பட்டுள்ளார். மஹேதி ஹசன், ஆபிப் ஹொசைன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 13 பேர் கொண்ட வங்காளதேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. லிட்டேன் தாஸ், 3. சவுமியா சர்கார், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. யாசின் அராபத, 7. ஆபிஃப் ஹொசைன், 8. மெகசாடெக் ஹொசைன், 9. சபீர் ரஹ்மான், 9.தைஜூல் இஸ்லாம், 11. மஹெதி ஹசன், 12. முகமது சாய்புதின், 13. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து