முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ. 28,824க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25,000 ரூபாயை தாண்டி விற்பனையானது. பின் ஜூன் மாதம் 26,000 ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30,000 ரூபாயையும் தாண்டிய தங்கத்தின் விலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர் ஏற்றம், இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கத்தின் விலையில் நேற்று சற்று ஏற்றம் கண்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 17 ரூபாயும், சவரனுக்கு 136 ரூபாயும் உயர்ந்தது. இதனால், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3603-க்கும், ஒரு சவரன் ரூ.28,824 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு உயர்ந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.50,300-க்கு விற்பனையானது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதில் இருந்து சுமார் 4,000 ரூபாய் வரை சவரன் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து