முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முதல்வருக்கு ரூ.1.27 கோடி சொத்து வேட்புமனுவில் தகவல்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

அரியானா முதல்வர் மனோ கர்லால் கட்டாருக்கு ரூ.1.27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட இங்கு வருகிற 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அதை தொடர்ந்து பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அரியானா மாநில பா.ஜ.க.தலைவர் பொஷ்பராலா, தோஹானா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப்சிங் பெஷோ வா தொகுதியிலும், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பரோடா தொகுதியிலும், மல்யுத்த வீராங்கனை படாதர் போகத் தாத்ரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் கர்னால் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மனோகர்லால் கட்டார் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.1.27 கோடி என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 94 லட்சம் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 33 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாருக்கு ரோதக்கில் உள்ள தனது சொந்த கிராமமான பின்யானியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பண்ணை நிலம் உள்ளது. அதே கிராமத்தில் 800 சதுர அடி அளவில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கையிருப்பு தொகையாக ரூ. 15 ஆயிரம் மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல்வர்  கட்டாருக்கு சொந்த வாகனம் எதுவும் இல்லை.அவரது வேட்புமனு தாக்கலின் போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து