முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம்: மம்தா பானர்ஜி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மக்களை பிரித்தாள முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி பலிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமித்ஷா, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் இந்துக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தால் அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, மாநிலங்களவையில் கடந்த 2016-ம் ஆண்டில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அமித்ஷா அப்போது நினைவுகூர்ந்தார்.

லட்சக்கணக்கான இந்து அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பது போன்ற தவறான தகவல்கள் பரவி வருவதை சுட்டிக் காட்டிய அமித்ஷா, தேசிய மக்கள் பதிவேடு தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்பி மக்கள் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்த மம்தா பானர்ஜி போன்றவர்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் பாதுகாப்புக்கு தேசிய மக்கள் பதிவேடு மிகவும் அவசியம் என்றும் அமித்ஷா கூறினார்.

இந்நிலையில், மதவேறுபாடுகளைக் களைந்து மேற்கு வங்க மக்கள் ஒற்றுமையுணர்வுடனும் சமய நல்லிணக்கத்துடனும் துர்கா பூஜையை கொண்டாடி வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். எங்கள் மாநிலத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எங்கள் விருந்தோம்பலையும் பெறலாம். ஆனால் மக்களை பிரித்தாளும் அரசியலுடன் வந்தால் அது பலிக்காது என்று அமித்ஷாவை மறைமுகமாக சாடிய மம்தா, மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து