சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      விளையாட்டு
Ashwin 2019 05 24

விசாகப்பட்டினம் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்தார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்தது. நான்காவது நாளான நேற்று முன்தினம் (அக்.,05) ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் கடைசி மற்றும் இறுதி நாளான நேற்று (அக்.,06) இந்திய வீரர் அஸ்வின், டி புரூன் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அஸ்வின் நிகழ்த்தி உள்ளார். 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து