முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர் பலியான விவகாரம்: இந்திய - வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

டாக்கா : வங்காளதேச எல்லை பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொல்கத்தாவின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷைரொஷர் கிராமத்தை சேர்ந்த 3 மூன்று மீனவர்கள் இந்திய - வங்காளதேச எல்லையில் உள்ள பத்மா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் மீனவர்கள் 3 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களில் 2 பேரை மட்டும் விடுதலை செய்து விட்டு இந்த தகவலை இந்திய படையினரிடம் தெரிவிக்கும்படி எச்சரித்து அனுப்பினர். அவர்கள் அளித்த தகவலையடுத்து 6 பேர் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வங்காளதேச வீரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட படகு ஒன்றில் சென்றனர். ஆனால், ஆற்றின் நடுவே சர்வதேச எல்லையில் வங்காளதேச படையினர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய வீரர்கள் சென்ற படகை சுற்றிவளைக்க முயன்றதால் பாதுகாப்பு படையினர் தங்கள் படகை திருப்பி மீண்டும் இந்திய எல்லைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது திடீரென வங்காளதேச படையை சேர்ந்த சையது என்ற வீரர் இந்திய பாதுகாப்பு படையினர் சென்ற படகை பின்னால் இருந்து குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த திடீர் தாக்குதலில் படகில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் விஜய் பின் சிங்கின் தலை மீது குண்டு பாய்ந்து அவர் படகிலேயே உயிரிழந்தார். மற்றொரு இந்திய வீரர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக இரு நாட்டு எல்லை பாதுகாப்புப்படை தலைவர்கள் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  இந்தியா-வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் இடையேயான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறுதலாக நடந்த இந்த சம்பவம் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு படை தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது. எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான பிரச்சனையை கண்டறிந்து அதை இரு நட்பு நாடுகளும் அமைதி ரீதியில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து