எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      உலகம்
H1B Visa 2019 07 04

எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்-1 பி விசா வழங்கி வருகிறது. இந்த எச்-1 பி விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. இந்த நிலையில், எச்.1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்தக்கட்டணம் திரும்பப் பெற முடியாத கட்டணம் ஆகும். புதிய மின்னணு முறையிலான பதிவு நடைமுறைக்கு,  உயர்த்தப்பட்ட கட்டணம் ஊக்கமளிக்கும் என்று  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து