முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் வெடிப்பு: இஸ்ரேல் ஆலோசகர் - சிதம்பரம் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.14 - இஸ்ரேல் தூதரக கார் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமித்ரார் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார். கடந்த மாதம் 13 ம் தேதி டெல்லியில் பிரதமர் வீடு அருகே உள்ள பகுதியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தூதரக அதிகாரியின் மனைவி உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் இந்திய பத்திரிகையாளர் சையது முகமது காஸ்மி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமித்ரா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்