முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீளம்: 3,858 அடி, உயரம்: 1,102 அடி! சீனாவில் புதிய பாலம் திறப்பு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஏப். - 9 - உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 1,102 அடி உயரமும், 3,858 அடி நீளமும் கொண்டதாகும். இந்தப் பாலம் கட்டுவதற்கான பணி கடந்த 2007 ம் ஆண்டு துவங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றது. இந்தப் பாலம் 2 சுரங்கப் பாதைகளையும் இணைக்கிறது.இந்தப் பாலத்தின் திறப்பு விழா கடந்த இரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இரு மலைகளுக்கு இடையே இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இரவில் இந்த பாலம் ஜொலிக்கும் வண்ணம் 1,868 விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 4 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் கார், லாரி, பஸ், கனரக வாகனங்கள் ஆகியவை இருபுறங்களிலும், 50 கி.மீ. வேகத்தில் செல்லும் வண்ணம் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் கடந்து செல்ல விரும்புபவர்களுக்காக தனியாக பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்