முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சலக ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ரூர்கேலா .மார்ச்.- 30 - தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அஞ்சலக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  முறையான பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,ஓரிட டெலிவரி மையத்தை அமைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி ருகிறார்கள். ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்று  அஞ்சலக  ஊழியர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு  தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போஸ்ட்மேன் மறும் டி.பிரிவு அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின்  பொதுச்செயலாவ எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள  தாக் பவன் முன்பு  மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல ஆண்டு  காலமாக தாங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகவும் ஆனால்  யாரும் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்  கூறினார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது அஞ்சலக ஊழியர்கள்தான் என்றும் அவர் கூறிர்.

அஞ்சலக ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் காலி இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும்  இதனால் இருக்கும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது என்றும் அவர்  கூறினர்.

தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் நாடு தழுவிய  கால வரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த கால வரையற்ற வேலை நிறுத்தம் எப்போது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்