முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்கள் போராட்டம் எதிரொலி: ராஜபக்சே உரை ரத்து

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன். 8 - லண்டனில் நேற்று காலை நடப்பதாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் லண்டன் வருகையை எதிர்த்து அங்குள்ள தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மான்சன் ஹவுஸில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்த நிகழச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு வைர விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு காமன்வெல்த் வணிக வளாகத்தில் ராஜபக்சே உரை நிகழ்த்துவதாக இருந்தது. 

ஆனால் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது உரை திடீரென ரத்து செய்யப்பட்டது. அவர் உரை நிகழ்த்தி அதை எதிர்த்து தமிழர்கள் அங்கு கூடி போராடினால் அந்த இடமே ஸ்தம்பித்துவிடும் நிலை ஏற்படும். அவ்வாறு நடந்தால் பிற நாட்டு அதிபர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். இது குறித்து இங்கிலாந்து போலீசார் காமன்வெல்த் தலைமையகத்திற்கு தெரிவித்தனர். இங்கிலாந்து போலீசார் தம்மால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து நேற்று காலை நடப்பதாக இருந்த நிகழ்ச்சிகளை காமென்வெல்த் உயர் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்