முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒபாமா பேச்சு

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.16 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். இதனையொட்டி அமெரிக்க மக்களிடையே ஆதரவு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலை குறித்தும் அமெரிக்கா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் விரிவாக பேசினார். ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதர நெருக்கடி குறித்தும் மன்மோகன் சிங்குடன் ஒபாமா விவாதித்தார். இருநாடுகளுக்கிடையே மட்டுமல்லாது உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியை போக்கி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது குறித்தும் இருவரும் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிக்க செய்வது குறித்தும் மன்மோகன் சிங்குடன் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக தெரிகிறது. அமெரிக்க வாக்குரிமை பெற்ற இந்தியர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அணுபாதுகாப்பு சட்டம் இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் இருப்பதற்கு அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இதன்படி இந்தியாவில் உள்ள அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யும் சட்டம்தான் அணுபாதுகாப்பு சட்டமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்