முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம் சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதன்கிழமை, 20 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். - 20 - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும், கோர்ட்டை அவமதித்ததற்காக கடந்த ஏப்ரல் 26 ம் தேதி அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். அதுநாள் முதல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறார் என்றும் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் ஜனநாயகத்தை தொடர்ந்து நீடிக்க செய்யும் வகையில் அரசியல் சட்ட கடமையாற்றுமாறு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு பதில் ஒரு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறும் அதிபர் ஜர்தாரிக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் தொலைக்காட்சி சேனல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்