முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது ஒரு நாள் போட்டி - ஆஸ்திரேலியா தொடரை வென்றது

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், ஏப். 12 - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி யது.  

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வாட்சன் அபாரமாக ஆடி சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். முன்னாள் கேப்டன் பாண்டிங் அவருக்குப் பக்கபலமாக ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர் ஜான்சன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் ஸ்மித் இருவரும் நன்கு பந்து வீசி முக்கி ய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாட்சன் மற்றும் ஹாஸ்டிங்ஸ் இருவரும் மேற்படி இருவருக்கும் பக்கபலமாக பந்து வீசினர். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையில் வங் கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஷாகிப் அல் ஹச ன் தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 போட்டி கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2 - வது போட்டி மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய மைதானத்தில் நடைபெற்றது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில், தமீம் இக்பால் மற்றும் இம்ருல் கெய்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர் கல் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஸ்பிகர் ரகீம் 80 பந்தில் 81 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந் தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

அடுத்தபடியாக சக்ரியார் நபீஸ் 73 பந்தில் 56 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஸ்மித் வீசிய பந்தில் அவரிட மே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவிர, மக்மதுல்லா 51 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி அடக்கம். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜான்சன் நன்கு பந்து வீசி, 54 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். ஸ்மித் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹா ஸ்டிங்ஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 230 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை வங்கதேச அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 26 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வாட்சன் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 96 பந்தில் 185 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 15 பவுண்டரி மற் றும் 15 சிக்சர் அடக்கம். தவிர, பாண்டிங் 42 பந்தில் 37 ரன்னை எடுத் தார். 

வங்கதேச அணி சார்பில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 35 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மற்ற வீரர்கள் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்