முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியஅணி உத்தேச பட்டியல் அறிவிப்பு

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. - 1 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்காக 30 பேர் கொண்ட வீரா ங்கனைகளின் உத்தேச பட்டியலை இந் திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய ம் (பி.சி.சி.ஐ.)நேற்று அறிவித்தது.  இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 17 -ம் தேதி வரை மகளிருக்கான உலகக் கோ ப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.  இதில் முன்னணி நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ள இருக்கின்ற  ன. இதற்காக பி.சி.சி.ஐ. தீவிர ஏற்பா டுகளைச் செய்து வருகிறது. 30 பேர் கொண்ட இந்த வீராங்கனைக ளின் பட்டியலை தேசிய மகளிர் தேர்வு க் குழுவினர் தயார் செய்தனர். இந்தக் குழுவில் மூத்த வீராங்கனைகளான      மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ் வாமி ஆகியோர் இடம் பெற்று இருந் தனர்.  இந்திய வீராங்கனைகளின் உத்தேச பட்டியல் : - மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், அமிதா சர்மா, சுலக்ஷனா நாய க், ஜூலான் கோஸ்வாமி, ரீமா மல் கோத்ரா, பூனம் ரவுத், கெளகர் சுல்தா   னா, எக்தா பிஸ்த், அர்ச்சனா தாஸ், எஸ். சுபலக்ஷ்மி, ரசனரா பர்வீன், அனு ஜா பாடீல், என். நிரஞ்சனா, மொ  னா மெஸ்ரம், சுனிதாஆனந்த், எம்.டி. திருஷ்காமினி, லத்திகா குமாரி, நிஷி தா பராசி, வேத கிருஷ்ணமூர்த்தி, சுவேதா ஜாதவ், ரிது திருப், மொக் சா செளத்திரி, கவிதா பாடீல், பூணம் ஜாதவ், கருணா ஜெயின், மந்திரா மொகபத்ரா, அனகா தேஷ்பாண்டே, நிஷூ செளத்திரி, மற்றும் சுஷ்மாவர் மா ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்